Sunday, 25 August 2024

நீர்த்துளி

 கனவிலே எழுதி மடித்த கவிதை:

(வரிகள் உபயம்: கனவுப் புலவன்)


நீர் ஓர்துளியில் கருவாகி ஒரு

நீர் சூழ்நிலையில் உருவாகி அந்த

நீர்ப் புறந்தள்ளிட வெளியாகி பின்னொரு

நீர் உட்சென்றிடப் பெரிதாகி உயிர்

நீர் பருகிடவே சவமாகிப் பின்

நீர்க் கடன் முடித்திட எரியாகி ஒரு

நீர் வழித்தடத்தில் கரைந்திடும் வாழ்வில்

நீர்த் தலையுடையிறையை நினைந்தாங்கோர்

நீர்ப் பஞ்சணை துயில்வனைப் பணிந்திடக் கண்

நீர்க் கடலமிழாது உய்வாயே!

No comments:

Post a Comment