Sunday, 25 August 2024

மரத்தின் கோரிக்கை

 கனவிலே எழுதி மடித்த கவிதை-12:

பிப்ரவரி 20, 2018


தாளனைய நாவாலே தரைநீரைத்

தானுண்டு தலைநிமிர்ந்து பின்னும்

தன்னுடலுங் கரமுந்தான் மலர்ந்து

பின்னே பிஞ்சாகிக் காயாகித்

தான் பின்னே நற்கனியுமாகித்

தான் பெற்ற செல்வந்தனைத்

தானே யுண்டதில்லை என்றும்

தன்பாற் கல்லெறிந்தோர்க்குத்

தாழாதே கனியுதிர்க்கும் எஞ்ஞான்றும்

தான்பட்ட கல்லடிக்காய்த்

தன்பொருட்டு கண்ணீர் உதிர்க்கா

வத்தருவன்ன எம்மனது என்றென்றும்

என்பாற் பலன்வேண்டி கல்லெறிவோர்க்கும்

என்பொருட்டு யான் கண்ணீர் உதிர்க்காது

அன்பெனும் கனியுதிர்ப்பேன் எஞ்ஞான்றும்

தெம்பாக நானிங்கு உள்ளவரை

தென்பாற் பயணம் செல்லும்வரை!

- உங்கள் மீது அன்புகொண்ட மனமரம்

பி.ஜெயராமன்.

No comments:

Post a Comment