Sunday, 25 August 2024

இன்றடிக்கும் காற்று

கனவிலே எழுதி மடித்த கவிதை – 8

வழக்கமாக எனது கனவிலே வருகைதரும் கனவுப் புலவன் 16 மே 2017 அன்று மதியமும் வந்தான். எஸ்.பி.பி அவர்களின் குரலில் ஒரு பாடலைப் பாடிச் சென்றான். அவன் தந்த பாடல் வரிகள்:

பல்லவி:

இன்றடிக்கும் காற்று வந்து (தந்தனன தானன்னன்ன)
என்றும் வீசுமே (தந்தன்னானன்னா)
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி (தன தந்தனன்ன தந்தனன்ன)
மகிழ்ந்திருப்போமே (தனத்தனத் தானா)
இன்றடிக்கும் காற்று வந்து
என்றும் வீசுமே
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி
மகிழ்ந்திருப்போமே

அநுபல்லவி:

நொந்திருந்த காலமெல்லாம் வெந்துவிட்டதே (தந்தனன தானன்னன்ன தந்தன்னானன்னா)
நொந்திருந்த காலமெல்லாம் வெந்துவிட்டதே (தந்தனன தானன்னன்ன தந்தந்தந்தன்னா)
நாம் வென்று காட்டும் நாளும் இன்று வந்துவிட்டதே 
(தன தந்தனானா தானானன்ன தந்தந்தந்தன்னா)

இன்றடிக்கும் காற்று… தகதோம் தகதோம் ஹாங்
இன்றடிக்கும் காற்று வந்து
என்றும் வீசுமே
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி
மகிழ்ந்திருப்போமே

சரணம்-1:

மக்கள் மனதில் மாற்றம் (தந்தன் தனனத் தானா)
அது தருமே இனி ஏற்றம் (தன தனனாதன தானா)
சில வெட்கங்கெட்ட கூட்டம் (தன தன்னன்னன்னன் தானா)
அவை எட்டுத்திக்கும் ஓட்டம் (தன தன்னன்னன்னன் தானா)
மக்கள் மனதில் மாற்றம்
அது தருமே இனி ஏற்றம்
சில வெட்கங்கெட்ட கூட்டம்
அவை எட்டுத்திக்கும் ஓட்டம்

இன்றடிக்கும் காற்று… தகதோம் தகதோம் ஹாங்
இன்றடிக்கும் காற்று….. தகதிமி தகதிமிதோம் ஆ ஹாங்
இன்றடிக்கும் காற்று வந்து
என்றும் வீசுமே
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி
மகிழ்ந்திருப்போமே

சரணம்-2:

இளைஞர் கையில் நாடு (தகதிமி தகதிமி தானா)
அவர் திறமைகளைத் தேடு (தன தனனன்னன்னன் தானா)
நற்கடமைதான் நம் வீடு (தந்தனனன்தானன் தானா)
அதை தினமும் நாடி ஓடு (தன தனனன்னானன் தானா))
இளைஞர் கையில் நாடு
அவர் திறமைகளைத் தேடு
நற்கடமைதான் நம் வீடு
அதை தினமும் நாடி ஓடு

இன்றடிக்கும் காற்று… தகதோம் தகதோம் ஹாங்
இன்றடிக்கும் காற்று….. தகதிமி தகதிமிதோம் ஆ ஹாங்
இன்றடிக்கும் காற்று வந்து
என்றும் வீசுமே
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி
மகிழ்ந்திருப்போமே
நொந்திருந்த காலமெல்லாம் வெந்துவிட்டதே
நொந்திருந்த காலமெல்லாம் வெந்துவிட்டதே
நாம் வென்று காட்டும் நாளும் இன்று வந்துவிட்டதே
இன்றடிக்கும் காற்று… தகதோம் தகதோம் ஹாங்
இன்றடிக்கும் காற்று….. தகதிமி தகதிமிதோம் ஆஹாங்
இன்றடிக்கும் காற்று வந்து
என்றும் வீசுமே
நம் சொந்தபந்தம் ஒன்றுகூடி
மகிழ்ந்திருப்போமே

நீர்த்துளி

 கனவிலே எழுதி மடித்த கவிதை:

(வரிகள் உபயம்: கனவுப் புலவன்)


நீர் ஓர்துளியில் கருவாகி ஒரு

நீர் சூழ்நிலையில் உருவாகி அந்த

நீர்ப் புறந்தள்ளிட வெளியாகி பின்னொரு

நீர் உட்சென்றிடப் பெரிதாகி உயிர்

நீர் பருகிடவே சவமாகிப் பின்

நீர்க் கடன் முடித்திட எரியாகி ஒரு

நீர் வழித்தடத்தில் கரைந்திடும் வாழ்வில்

நீர்த் தலையுடையிறையை நினைந்தாங்கோர்

நீர்ப் பஞ்சணை துயில்வனைப் பணிந்திடக் கண்

நீர்க் கடலமிழாது உய்வாயே!

மரத்தின் கோரிக்கை

 கனவிலே எழுதி மடித்த கவிதை-12:

பிப்ரவரி 20, 2018


தாளனைய நாவாலே தரைநீரைத்

தானுண்டு தலைநிமிர்ந்து பின்னும்

தன்னுடலுங் கரமுந்தான் மலர்ந்து

பின்னே பிஞ்சாகிக் காயாகித்

தான் பின்னே நற்கனியுமாகித்

தான் பெற்ற செல்வந்தனைத்

தானே யுண்டதில்லை என்றும்

தன்பாற் கல்லெறிந்தோர்க்குத்

தாழாதே கனியுதிர்க்கும் எஞ்ஞான்றும்

தான்பட்ட கல்லடிக்காய்த்

தன்பொருட்டு கண்ணீர் உதிர்க்கா

வத்தருவன்ன எம்மனது என்றென்றும்

என்பாற் பலன்வேண்டி கல்லெறிவோர்க்கும்

என்பொருட்டு யான் கண்ணீர் உதிர்க்காது

அன்பெனும் கனியுதிர்ப்பேன் எஞ்ஞான்றும்

தெம்பாக நானிங்கு உள்ளவரை

தென்பாற் பயணம் செல்லும்வரை!

- உங்கள் மீது அன்புகொண்ட மனமரம்

பி.ஜெயராமன்.