முற்றத்தில் நிலவொளி படர்ந்திருக்க
சித்தத்தில் அவனினைவு தொடர்ந்திருக்க
அற்றைத் திங்கள் மெல்ல குறைந்திருக்க
நெற்றித் திலகத்தோன் உள்ளம் நிறைந்திருக்க
ஒற்றையில் நிற்பவளை அவன் நோக்கினான்
சித்தத்தின் அச்சந்தனை அவன் போக்கினான்
தண்முத்தத்தில் புதுமச்சங்கள் உருவாக்கினான்
நித்திலங்களொடு விண்ணரை நிலவு
மெத்தைதனை நாடியது அரைமனதொடு
காத்திருந்த பொழுது நெடும் பொழுதாக
பார்த்திருக்கும் பொழுது நொடிப் பொழுதாக
தோற்றம் தந்ததே மனதில் மாற்றம் தந்ததே!
No comments:
Post a Comment