देवीमाहात्म्यम्
पूर्वभागः
कवचम् ||१||
தேவீமாஹாத்ம்யம்
பூர்வபாகம்
கவசம் ||1||
न्यासः
ந்யாஸ:
(கூறுதல்)
अस्य श्रीदेवीकवचस्तोत्र महामन्त्रस्य |
ब्रह्मा ऱषिः | अनुष्टुप्छन्दः | श्रीमहालक्ष्मीर्देवता |
ह्रां बीजं ह्रीं शक्तिः ह्रूं कीलकम् |
श्रीमहालक्ष्मी प्रसादसिद्ध्यर्थे जपे विनियेगः ||
அஸ்ய ஸ்ரீதே3வீ
கவசஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய |
ப்ரஹ்மா ர்ஷி: | அநுஷ்டுப்
சந்த3: |
ஸ்ரீமஹாலக்ஷ்மீர் தே3வதா |
ஹ்ராம் பீ3ஜம்
ஹ்ரீம் ஶக்தி: ஹ்ரூம் கீலகம் |
ஸ்ரீமஹாலக்ஷ்மீ
ப்ரஸாத3
ஸித்3த்4யர்தே2 ஜபே விநியோக: ||
मार्कण्डेय उवाच -
यद्गुह्यं परमं लोके सर्वरक्षाकरं नृणाम् |
यन्न कस्यचिदाख्यातं तन्मे ब्रूहि पितामह ||१||
மார்கண்டே3ய
உவாச -
யத்3கு3ஹ்யம் பரமம் லோகே ஸர்வரக்ஷாகரம் ந்ருணாம் |
யந்ந கஸ்யசிதா3க்2யாதம் தந்மே ப்3ரூஹி பிதாமஹ ||1||
மார்கண்டேயர்
கூறியது:
ப்ரஹ்மதேவரே! எது
உலகில் மிக்க ரஹஸ்யமானதோ,
மனிதர்க்கு எல்லா பாதுகாப்பையும் அளிப்பதோ, (இதுவரை)
எவர்க்கும் சொல்லப் படாதுளதோ, அதை (உலக நன்மைக்காக) எனக்கு
உபதேஸிக்க வேண்டும்!
ब्रह्मोवाच -
अस्ति गुह्यतमं विप्र सर्वभूतोपकारकम् ।
देव्यास्तु कवचं पुण्यं तच्छृणुष्व महामुने ।। २ ।।
प्रथमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी ।
तृतीयं चन्द्रघण्टेति कूष्माणडेति चतुर्थकम् ।। ३ ।।
पंचमं स्कन्दमातेति षष्टं कात्यायनीति च ।
सप्तमं कालरात्रीति महागौरिति चाष्टमम् ।। ४ ।।
नवमं सिद्धिदा प्रयोक्ता नवदुर्गाः प्रकीर्किताः ।
उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महातमना ।। ५ ।।
ப்3ரஹ்மோவாச
-
அஸ்தி கு3ஹ்யதமம்
விப்ர ஸர்வபூ4தோபகாரகம் |
தே3வ்யாஸ்து
கவசம் புண்யம் தச்ச்2ருணுஷ்வ மஹாமுநே || 2 ||
ப்ரத2மம்
ஶைலபுத்ரீ ச த்3விதீயம் ப்3ரஹ்மசாரிணீ |
த்ருதீயம் சந்த்3ரக4ண்டேதி கூஷ்மாண்டே3தி சதுர்த2கம்
|| 3 ||
பஞ்சமம் ஸ்கந்த3மாதேதி
ஷஷ்டம் காத்யாயநீதி ச |
ஸப்தமம் காலராத்ரீதி
மஹாகௌ3ரீதி சாஷ்டமம் || 4 ||
நவமம் ஸித்3தி4தா3 ப்ரோக்தா நவது3ர்கா:
ப்ரகீர்திதா: |
உக்தாந்யேதாநி நாமாநி
ப்3ரஹ்மணைவ மஹாத்மநா || 5 ||
ஶ்லோகம் : 2-5
ப்ரஹ்மா கூறியது -
2) ப்ராஹ்மணரே!
உயிர்களனைத்திற்கும் உபகாரமாகவும், மிக்க ரஹஸ்யமானதாகவும்,
புண்யமானதுமாகவும் தேவீ கவசம் உள்ளது. பெருமை மிக்க முனிவரே! அதைக்
கேளும்!
3) முதலாவதாக பர்வதராஜபுத்ரி,
இரண்டாவது ப்ரஹ்மசாரிணீ, மூன்றாவது
சந்த்ரகண்டா, நான்காவது கூஷ்மாண்டா;
4) ஐந்தாவது ஸ்கந்தமாதா,
ஆறாவது காத்யாயனீ, ஏழாவது காலராத்ரீ, எட்டாவது மஹாகௌரீ
5) ஒன்பதாவது ஸித்திப்ரதா என
இவ்வாறு துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் உனக்கு எடுத்துரைக்கப் பட்டன. இந்நாமங்கள்
பெருமைமிக்க வேதபுருஷனாலேயே கூறப்பட்டவை.
अग्निना दह्यमानस्तु शत्रुमध्ये गतो रणे ।
विषमे दुर्गमे चैव भयार्ताः शरणं गताः ।।६।।
न तेषां जायते किंचिदशुभं रणसंकटे ।
नापदं तस्य पश्यन्ति सर्व दुःखक्षयंकरी ।।७।।
यैस्तु भक्त्या स्मृता नूनं तेषामृद्धिः प्र जाय ते ।
प्रेतसंस्था तु चामुण्डा वापाही महिषासना ।।८।।
ऐन्द्री गजसमारूढा वैष्णवी गरम डाल ना ।
माहेश्वरी वृषारूढा कौमारी शिखिवाहना ।।९।।
ब्राह्मी हंससमारूढा सर्वाभरणभूषिता ।
नानाभरणशोभाढ्या नानारत्नोपशोभिताः ।।१०।।
அக்3நிநா
த3ஹ்யமாநஸ்து ஶத்ருமத்4யே க3தோ ரணே |
விஷமே து3ர்க3மே சைவ ப4யார்தா: ஶரணம்க3ட்கதா:
||6||
ந தேஷாம் ஜாயதே
கிஞ்சித3ஶுப4ம் ரணஸங்கடே |
நாபத3ம்
தஸ்ய பஶ்யந்தி ஸர்வது3:க2க்ஷயங்கரீ ||7||
யைஸ்து ப4க்த்யா
ஸ்ம்ருதா நூநம் தேஷாம்ருத்3தி4 ப்ரஜாயதே
|
ப்ரேதஸம்ஸ்தா2 து
சாமுண்டா3 வாராஹீ மஹிஷாஸநா ||8||
ஐந்த்3ரீ க3ஜஸமாரூடா4 வைஷ்ணவீ க3ருடா3ஸநா |
மாஹேஶ்வரீ வ்ருஷாரூடா4 கௌமாரீ
ஶிகி2வாஹநா ||9||
ப்3ராஹ்மீ
ஹம்ஸமாரூடா4 ஸர்வாப4ரணபூ4ஷிதா |
நாநாப4ரணஶோபா4ட்4யா நாநாரத்நோபஶோபி4தா: ||10||
ஶ்லோகம் : 6-10
அக்நியால் எரிக்கப்
பட்டவர்களும்,
யுத்தத்தில் சத்ருவினிடையே அகப்பட்டுக் கொண்டவர்களும், கடக்க முடியாத சங்கடத்தில் பயமடைந்தவர்களும் (மேற்கூறிய நாமங்களில் ஒன்றை
மனதால் நினைத்து தேவியிடம்) சரண் புகுந்தவர்கள் (ஆயின்): (6)
அவர்களுக்கு யுத்த
ஸங்கடத்தில் தீங்கு சிறிதும் ஏற்படாது. அவர்களில் ஒருவருக்கும் ஆபத்து வரப்
(நவதுர்க்கைகளும்) பார்த்திருக்க மாட்டார்கள். துர்க்கா தேவியானவள், எல்லாத்
துன்பங்களையும் துடைப்பவள். (7) எவர்களெல்லாம் பக்தியுடன்
தேவியை நினைக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயம் செல்வம்
பெருகும். சாமுண்டா தேவி ப்ரேதத்தை ஆஸநமாகக் கொண்டவள். வாராஹீதேவி எருமையை
வாஹநமாகக் கொண்டவள். (8) இந்த்ராணீதேவி ஐராவதம் என்ற யானை
வாஹநமுடையவள். விஷ்ணுஶக்தியான மஹாலக்ஷ்மி கருட வாஹநமுடையவள். மஹேஶ்வரபத்நி,
வ்ருஷப வாஹநமுடையவள்; குமரக் கடவுளின் ஶக்தி,
மயில்வாஹநமுடையவள். (9) எல்லா ஆபரணங்களாலும்
அலங்கரிக்கப் பெற்ற ப்ரஹ்மபத்நி, ஹம்ஸ வாஹநமுடையவள்.
எல்லோருமே பலவகை ஆபரணங்களும் பூண்டு, பலவகைப்பட்ட
ரத்னங்களால் ப்ரகாசிப்பவர்கள். (10)
ப்ரஹ்மாவானவர்
இரண்டாவது ஶ்லோகத்திலிருந்து தேவீ கவசத்தை மார்கண்டேயருக்கு உரைக்கிறார். இந்தப்
பகுதியில் 11-13
வரையிலான ஶ்லோகங்களில் அனைவரையும் ரக்ஷிக்கும் தேவியரின் ஆயுதங்கள்
பற்றி உரைக்கிறார்.
दृश्यनते रथमारूढा देव्यः क्रोधसमाकुलाः ।
शङ्खं चक्रं गदां शक्तिं हलं च मुसलायुधम् ।।११।।
खेटकं तोमरं चैव परशुं पाशमेव च ।
कुनतायुधं त्रिशूलं च शार्ङ्गायुधमनुत्तमम् ।।१२।।
दैत्यानां देहनाशाय भक्तानामभयाय च ।
धारयन्त्यायुधानीत्थं देवानां च हिताय वै ।।१३।।
த்3ருஶ்யந்தே
ரத2மாரூடா4 தே3வ்ய:க்ரோத4ஸமாகுலா: |
ஶங்க2ம்
சக்ரம் க3தா3ம் ஶக்திம் ஹலம் ச
முஸலாயுத4ம் ||11||
கே2டகம்
தோமரம் சைவ பரஶும் பாஶாமேவ ச |
குந்தாயுத4ம்
த்ரிஶூலம் ச ஶார்ங்காயுத4மநுத்தமம் ||12||
தை3த்யாநாம்
தே3ஹநாஶாய ப4க்தாநாமப4யாய ச |
தா4ரயந்த்யாயுதா4நீத்த2ம் தே3வாநாம் ச ஹிதாய வை
||13||
ஶ்லோகம் : 11-13
எல்லா தேவியரும்
கோபத்தால் கலங்குபவர்களாய்,
தேரிலேறி (தேவர்களைக் காக்கும் பொருட்டு) காட்சியளிக்கின்றனர்.
ஶங்கு, சக்ரம், கதை, ஶக்தி, கலப்பை, உலக்கை முதலிய
ஆயுதங்களும், கேடகம், தோமரம், கோடரி, கயிறு, குந்தாயுதம்,
த்ரிஶூலம், ஒப்புயர்வற்ற ஶார்ங்கம் என்னும்
வில் ஆகிய ஆயுதங்களை அஸுரர்களின் உடலழிவிற்கும், பக்தர்களின்
அச்ச அழிவிற்கும் தேவர்களின் நன்மைக்குமாக ஏந்தியிருக்கின்றனர்.
(இதன் பின், ஶ்லோகங்கள் 14 முதல் 37 வரை
நம்மை பத்து திசைகளில் மற்றும் நமது உடலின் அனைத்து உறுப்புகளை தேவியர்
காப்பாற்றுவதற்கான வேண்டுதல்கள் பற்றி ப்ரஹ்மா விவரிக்கிறார். அவற்றை அடுத்து
வரும் பகுதிகளில் காண்போம்.)
महाबले महोत्साहे महाभय-विनाशिनि ।
त्राहि मां देवि दुष्प्रेक्ष्ये शत्रूणां भयवर्धिनि ।।१४।।
प्राच्यां रक्षतु मामैन्द्री आग्नेय्या-मग्निदेवता ।
दक्षिणेSवतु वाराही नैर्ऋत्यां खड्गधारिणी ।।१५।।
प्रतीच्यां वारुणी रक्षेद्वायव्यां मृगवाहिनी ।
रक्षेदुदीच्यां कौमारी ईशान्यां शूलधारिणी ।।१६।।
ऊर्ध्वं ब्रह्माणि मे रक्षेदधस्ता-द्वैष्णवी तथा ।
एवं दशदिशो रक्षे-च्चामुण्डा शव वाह ना ।।१७।।
மஹாப3லே
மஹோத்ஸாஹே மஹாப4ய விநாஶிநி |
த்ராஹி மாம் தே3வி து3ஷ்ப்ரேக்ஷ்யே ஶத்ரூணாம் ப4யவர்தி4நி ||14||
ப்ராச்யாம் ரக்ஷது
மாமைந்த்ரீ ஆக்3நேய்யா-மக்3நிதே3தா |
த3க்ஷிணேSவது வாராஹீ நைர்ருத்யாம் க2ட்3க3தா4ரிணீ ||15||
ப்ரதீச்யாம் வாருணீ
ரக்ஷேத்3வாயவ்யாம் ம்ருக3வாஹிநீ |
ரக்ஷே-து3தீ3ச்யாம் கௌமாரீ ஈஶாந்யாம் ஶூலதா4ரிணீ ||16||
ஊர்த்4வம்
ப்3ரஹ்மாணி மே ரக்ஷே-த3த4ஸ்தா-த்3வைஷ்ணவீ ததா2 |
ஏவம் த3ஶ தி3ஶோ ரக்ஷேச்சாமுண்டா சவவாஹநா ||17||
ஶ்லோகம் : 14-17
பெரும்பலம்
பொருந்தியவளே! பெரும் உற்சாகம் பொருந்தியவளே! கொடிய அச்சத்தைப் போக்குபவளே!
எதிரிகளுக்கு அச்சத்தை வளர்ப்பவளே!
காண்பதற்கரிய தேவியே!
என்னைக் காத்தருள்வாய்.
கிழக்கில் என்னை
இந்த்ராணீ காப்பாற்றட்டும்! அக்நி மூலையில் அக்நி தேவதையும், தெற்கில்
வாராஹியும், ந்ருதி மூலையில் கட்கதாரிணியும்
காப்பாற்றட்டும்!
மேற்கில் வாருணீ
ஶக்தியும்,
வாயு மூலையில் ம்ருகவாஹிநியான வாயுஶக்தியும், காப்பாற்றட்டும்.
வடக்கில் கௌமாரியும், ஈஶாநமூலையில் ஶூலதாரிணியும்
காப்பாற்றட்டும்!
ப்ரஹ்மாணி! மேலே நீ
காத்தருள்வாய்;
விஷ்ணு ஶக்தியே! கீழே நீ காத்தருள்வாய்! இங்ஙனம் பத்துத்
திசைகளையும் சவவாஹனமுடைய சாமுண்டாதேவீ காத்தருள வேண்டும்.
जया मे चाग्रतः स्थातु विजया स्थातु पृष्ठतः ।
अजिता वामपार्श्वे तु दक्षिणे चापराजिता ।।१८।।
शिखामुद्योतिनी रक्षेदुमा मूर्ध्नि व्यवस्थिता ।
मालाधरी ललाटे च भृवो रक्षेद्यशस्विनी ।।१९।।
त्रिनेत्रा च भृवोर्मद्ये यमघण्टा च नासिके ।
शङ्खिनी चक्षुषोर्मध्ये श्रोत्रयोर्द्वारवासिनी ।।२०।।
ஜயா மே சாக்3ரத:
ஸ்தா2து விஜயா ஸ்தா2து ப்ருஷ்ட2த: |
அஜிதா வாமபார்ஶ்வே து
த3க்ஷிணே சாபராஜிதா ||18||
ஶிகா2முத்3யோதிநீ ரக்ஷேது3மா மூர்த்4நி
வ்யவஸ்தி2தா |
மாலாத4ரீ
லலாடே ச ப்4ருவோ ரக்ஷேத்3யஶஸ்விநீ ||19||
த்ரிநேத்ரா ச ப்4ருவோர்மத்4யே யமக4ண்டா ச நாஸிகே |
ஶங்கி2நீ
சக்ஷுஷோர்மத்3யே ஶ்ரோத்ரயோர்த்3வாரவாஸிநீ
||20||
ஶ்லோகம் : 18-20
ஜயா ஶக்தி என்
முன்னிருக்கட்டும். விஜயாஶக்தி பின்னிருக்கட்டும். அஜிதா இடது பக்கமும், அபராஜிதா
வலது பக்கமும் இருக்கட்டும்.
ஶிகையை உத்யோதினீ
ஶக்தியும்,
ஶிரஸில் உறையும் உமா ஶிரஸையும், லலாடத்தில்
மாலாதாரிணியும், புருவத்தை யஶஸ்விநியும் காத்தருள வேண்டும்.
புருவமத்தியில்
த்ரிநேத்ரா தேவியும்,
நாஶியில் யமகண்டா தேவியும், கண்களின் நடுவில்
ஶங்கினீ ஶக்தியும், காதுகளில் த்வாரவாஸிநீ ஶக்தியும் (காக்க
வேண்டும்).
कपोलौ कालिका रक्षेत् कर्णमूले तु कां करी ।
नालिकायां सुगनधा च उत्तरोष्ठे च चर्चिका ।।२१।।
अधरे चामृतकला जिह्वायां च सरस्वती ।
दन्तान् रक्षतु कौमारी कण्ठमध्ये च चण्डिका ।।२२।।
घण्टिकां तित्रघण्टा च महामाया च तालुके ।
रामाक्षी चिबुकं रक्षेद्वाचं मे सर्वमंगला ।।२३।।
ग्रीवायां भद्रकाली च पृष्ठवंशी धनुर्धरी ।
नीलग्रीवा बहिष्कण्ठे नलिकां नलकूबरी ।।२४।।
खड्गधारिण्युभौ स्कनधौ बाहू मे वज्रधारिणी ।
हस्तयोर्दण्डिनी रक्षेदंबिका चांगुलीषु च ।।२५।।
கபோலௌ காலிகா ரக்ஷேத்
கர்ணமூலே து ஶாங்கரீ |
நாஸிகாயாம் ஸுக3ந்தா4
ச உத்தரோஷ்டே ச சர்சிகா ||21||
அத4ரே
சாம்ருதகலா ஜிஹ்வாயாம் ச ஸரஸ்வதீ |
த3ந்தாந்
ரக்ஷது கௌமாரீ கண்ட2மத்4யே ச சண்டி3கா ||22||
க4ண்டிகாம்
சித்ரக4ண்டா ச மஹாமாயா ச தாலுகே |
காமாக்ஷீ சிபு3கம்
ரக்ஷேத்3வாசம் மே ஸர்வமங்கலா ||23||
க்3ரீவாயாம்
ப4த்3ரகாலீ ச ப்ருஷ்ட2வம்ஶீ த4நுர்த4ரீ|
நீலக்3ரீவா
ப3ஹிஷ்கண்டே2 நலிகாம் நலகூப3ரீ ||24||
க2ட்3க3தா4ரிண்யுபௌ4 ஸ்கந்தௌ4 பா3ஹூ மே வஜ்ரதா4ரிணீ |
ஹஸ்தயோர்த3ண்டி3நீ ரக்ஷேத3ம்பி3கா சாங்கு3லீஷு ச ||25||
ஶ்லோகம் : 21-25
கன்னத்தில்
காளிகாதேவியும்,
செவிப்பகுதியில் ஶாங்கரீதேவியும், மூக்குப்
பகுதிகளை ஸுகந்தாதேவியும், மேலுதட்டில் சர்ச்சிகாதேவியும்
காக்கட்டும்.
கீழுதட்டில்
அம்ருதகலா தேவியும்,
நாக்கில் ஸரஸ்வதியும் இருந்து காக்கட்டும். பற்களை கௌமாரியும்,
கழுத்தின் நடுவில் சண்டிகா தேவியும் இருந்து காக்கட்டும்.
உள்நாக்கை
சித்ரகண்டாதேவியும்,
தாடைகளை மஹாமாயையும், மோவாய்க்கட்டையை
காமாக்ஷியும், வாக்கை ஸர்வமங்கலாதேவியும் காக்கட்டும்.
இருதோள்களை
கட்கதாரிணியும்,
இருபுஜங்களை வஜ்ரதாரிணியும், கைகளை
தண்டினியும், விரல்களை அம்பிகையும் காக்கட்டும்.
नखाञ्शूलेश्वरी रक्षेत् कक्षौ रक्षेन्नलेश्वरी ।
स्तनौ रक्षेन्महादेवी मनः शोकविनाशिनी ।।२६।।
हृदयं ललितादेवी ह्युदरे शूलधारिणी ।
नाभिं च कामिनी रक्षेद् गुह्यं गुह्येश्वरी तथा ।।२७।।
भूतनाथा च मेढ्रं च गुदं महिषवाहिनी ।
कट्यां भगवती रक्षेज्जानुनी विन्ध्यवासिनी ।।२८।।
जङ्घे माबला रक्षेज्जानुमध्ये विनायकी ।
गुल्फयोर्नारसिंही च पादपृष्ठे मितौजसी ।।२९।।
पादांगुलीः श्रीधरी च पादाधस्तलवासिनी ।
नखान् दंष्ट्राकराली च केशांश्चैवोर्ध्वकेशिनी ।।३०।।
நகா2ஞ்ஶூலேஶ்வரீ
ரக்ஷேத் கக்ஷௌ ரக்ஷேந்நலேஶ்வரீ |
ஸ்தநௌ ரக்ஷேந்மஹாதே3வீ
மந: ஶோகவிநாஶிநீ ||26||
ஹ்ருத3யம்
லலிதாதே3வீ ஹ்யுத3ரே ஶூலதா4ரிணீ |
நாபி4ஞ்ச
காமிநீ ரக்ஷேத்3 கு3ஹ்யம் கு3ஹ்யேஶ்வரீ ததா2 ||27||
பூ4தநாதா2
ச மேட்4ரம் ச கு3த3ம் மஹிஷவாஹிநீ |
கட்யாம் ப4க3வதீ ரக்ஷேஜ்ஜாநுநீ விந்த்4யவாஸிநீ ||28||
ஜங்கே4 மஹாப3லா ரக்ஷேஜ்ஜாநுமத்4யே விநாயகீ |
கு3ல்ப2யோர்நாரஸிம்ஹீ ச பாத3ப்ருஷ்டே2 மிதௌஜஸீ ||29||
பாதா3ங்கு3லீ: ஸ்ரீத4ரீ ச பாதா3Sஸ்தலவாஸிநீ
|
நகா2ந் த3ம்ஷ்ட்ராகராலீ ச கேஶாம்ஶ்சைவோர்த்4வகேஶிநீ ||30||
ஶ்லோகம் : 26-30
நகங்களை ஶூலேஶ்வரி
காக்கட்டும். கஷ்கங்களை அநலேஶ்வரி காக்கட்டும்.
மார்புகளை மஹாதேவி
காக்கட்டும்.
மனதை ஶோகவிநாஶிநி
காக்கட்டும்.
இதயத்தை
லலிதாதேவியும்,
வயிற்றை ஶூலதாரிணியும், நாபியை காமிநீதேவியும்,
அந்தரங்க இடத்தை குஹ்யேஶ்வரியும் காக்கட்டும்.
பூதநாதா
லிங்கத்தையும்,
மஹிஷவாஹிநி அபாநத்வாரத்தையும், இடுப்பை
பகவதியும், முழங்கால்களை விந்த்யவாஸிநியும் காக்கட்டும்.
தொடைகளை மஹாபலா
தேவியும்,
முழங்கால் நடுவில் விநாயகீதேவியும், கணுக்கால்களில்
நாரஸிம்ஹ தேவியும், பின்னங்கால்களில் மிதௌஜஸியும்
காக்கட்டும்.
கால் விரல்களை
ஸ்ரீதரியும்,
பாதத்தின் கீழ் தலவாஸிநியும், நகங்களை
தம்ஷ்ட்ராகராஸியும், கேசங்களை ஊர்த்வகேஶிநியும் காக்கட்டும்.
रोमकूपेषु कौबेरी त्वचं वागीश्वरी तथा ।
रक्तमज्जावसामांसान्यस्थि मेदांसि पार्वती ।।३१।।
अन्त्राणि कालरात्रिश्च पित्तं च मुकुटेश्वरी ।
पद्मावती पद्मकोशे कफे चूडामणिस्तथा ।।३२।।
त्वालामुखी नखज्वालामभेद्या सर्वसन्धिषु ।
शुक्रं ब्रह्माणि मे रक्षेच्छायां छत्रेश्वरी तथा ।।३३।।
अहङ्कारं मनो बुद्धि रक्ष मे धर्मचारिणि ।
प्राणापानौ तथा व्यानसमानोदानमेव मेव च ।।३४।।
यशः कीर्तिं च लक्ष्मीं च सदा रक्षतु चक्रिणी ।
गोत्रमिन्द्राणि मे रक्षेत् पशून्मे रक्ष चण्डिके ।।३५।।
ரோமகூபேஷு கௌபே3ரீ
த்வசம் வாகீ3ஶ்வரீ ததா2 |
ரக்த-மஜ்ஜா-வஸா-மாம்ஸாந்-யஸ்தி-மேதா3ம்ஸி
பார்வதீ ||31||
அந்த்ராணி
காலராத்ரிஶ்ச பித்தஞ் ச முகுடேஶ்வரீ |
பத்3மாவதீ
பத்3மகோஶே கபே2 சூடா3மணிஸ்ததா||32||
ஜ்வாலாமுகீ2 நக2ஜ்வாலாமபே4த்3யா ஸர்வஸந்தி4ஷு |
ஶுக்ரம் ஶுக்ரம் ப்3ரஹ்மாணி
மே ரக்ஷேச்சா2யாம் ச2த்ரேஶ்வரீ ||33||
அஹங்காரம் மநோ பு3த்3தி4 ரக்ஷ மே த4ர்மசாரிணி |
ப்ராணாபாநௌ ததா2 வ்யாநஸமாநோதா3ந மேவ ச ||34||
யஶ: கீர்திஞ் ச
லக்ஷ்மீஞ் ச ஸதா3
ரக்ஷது சக்ரிணீ |
கோ3த்ரமிந்த்3ராணி மே ரக்ஷேத் பஶூந்மே ரக்ஷ சண்டி3கே ||35||
ஶ்லோகம் : 31-35
மயிர்க்கால்களில்
கௌபேரியும்,
தோலை வாகீஶ்வரியும், ரத்தம், வீர்யம், கொழுப்பு, மாம்ஸம்,
எலும்பு, மூளை இவற்றை பார்வதியும்
காக்கட்டும்.
குடல்களை
காலராத்ரியும்,
பித்ததாதுவை முகுடேஶ்வரியும், ஆதாரக் கமலங்களில்
பத்மாவதியும், கபதாதுவில் சூடாமணியும் காக்கட்டும்.
நகங்களின் ப்ரகாஶத்தை
ஜ்வாலாமுகியும்,
எல்லா ஸந்திகளிலும் அபேத்யாதேவியும் காக்கட்டும். ப்ரஹ்மாணி! எனது
ஶுக்லத்தை காப்பாய். நிழலை சத்ரேஶ்வரி காக்கட்டும்.
தர்மசாரிணீ! எனது
அஹங்காரத்தையும்,
மனதையும், புத்தியையும் காப்பாய்! அவ்வாறே
ப்ராணனையும், அபாநனையும், வ்யாநனையும்,
ஸமாநனையும், உதாநனையும் காப்பாய்.
புகழையும், கீர்த்தியையும்,
அழகையும் எப்போதும் சக்ரிணீ காக்கட்டும். இந்த்ராணீ! எனது கோத்ரத்தை
காப்பாய். சண்டிகே! எனது பசுக்களைக் காப்பாய்.
पुत्रान् रक्षेन्महालक्ष्मीर्भार्यां रक्षतु भैरवी ।
मार्गं क्षेमंकरी रक्षेद्विजया सर्वतः स्थिता ।।३६।।
रक्षाहीनं तु यत्स्थानं वर्जितं कवचेन तु ।
तत्सर्वं रक्ष मे देवि जयन्ती पापनाशिनी ।।३७।।
पदमेकं
न गच्छेत्तु यदीच्छेच्छुभमात्मनः ।
कवचेनावृतो नित्यं यत्र यत्र हि गच्छति ।।३८।।
तत्र तत्रार्थलाभश्च विजयः सर्वकामिकः ।
यं यं चिन्तयते कामं तं तं प्राप्नोति
निश्चितम्
।।३९।।
परमैश्वर्यमतुलं प्राप्स्यते भूतले पुमान् ।
निर्भयो जायते मर्त्यः संग्रामेष्वपराजितः ।।४०।।
புத்ராந் ரக்ஷேந்
மஹாலக்ஷ்மீர் பா4ர்யாம் ரக்ஷது பை4ர்வீ |
மார்க3ம் க்ஷேமங்கரீ
ரக்ஷேத் விஜயா ஸர்வத: ஸ்தி2தா ||36||
ரக்ஷாஹீநம் து
யத்ஸ்தா2நம் வர்ஜிதம் கவசேந து ||37||
பத3மேகம்
ந க3ச்சே2த் து யதீச்சே2ச்சு2ப4மாத்மந; |
கவசேநாவ்ருதோ நித்யம்
யத்ர யத்ர ஹி க3ச்சதி ||38||
தத்ர தத்ரார்த லாப4ஶ்ச
விஜய: ஸர்வாமிக: |
யம் யம் சிந்தயதே
காமம் தம் தம் ப்ராப்நோதி நிஶ்சிதம் ||39||
பரமைஶ்வர்ய மது4லம்
ப்ராப்ஸ்யதே பூ4தலே புமாந் |
நிர்ப4யோஜாயதே
மர்த்ய: ஸங்க்3ராமேஶ்வபராஜித: ||40||
ஶ்லோகம் : 36-40
மஹாலக்ஷ்மி
புத்திரர்களை காக்கட்டும்!
பைரவி மனைவியை
காக்கட்டும்!
க்ஷேமங்கரீ வழியைக்
காக்கட்டும்!
விஜயா
எல்லாப்புறமிருந்தும் எங்கும் காக்கட்டும்!
தேவியே! எந்த இடம்
கவசமில்லாமல் காக்கப் படாமல் உள்ளதோ, அதையெல்லாம் ஜயந்தீ எனவும்,
பாபநாஶிநீ எனவும் பெயர் பெற்ற நீ காத்தருள வேண்டும்.
தனக்கு உயர்நலனைக்
கோருபவன் (தேவியின் ஸ்மரணமாகிற கவசமின்றி) ஒரு அடி கூட செல்லக் கூடாது. எப்போதும்
கவசம் பூண்டவனாயின்,
எங்கெங்கு சென்றாலும் அங்கங்கு நாடிய பொருள் கைகூடுதலும், எல்லா எண்ணங்களின் சித்தியும் எய்துவான். எந்தெந்த விருப்பங்களை
விரும்புகின்றானோ, அவைகளையெல்லாம் நிச்சயமாக அடைவான்.
அப்புருஷன்
இப்புவியில் நிகரற்ற ஐஸ்வர்யத்தை அடைவான். போரில் வெல்லப் படாதவனாகவும்
பயமற்றவனாகவும் அம்மனிதன் விளங்குவான்.
त्रैलोक्ये तु भवेत् पूज्यः कवचेनावृतः पुमान् ।
इदं तु देव्याः कवचं देवानामपि दुर्लभम् ।।४१।।
यः पठेत् प्रयतो नित्यं त्रिसन्ध्यं श्रद्धयान्वितः ।
दैवीकला भवेत्तस्य त्रैलोक्य चापराजितः ।।४२।।
जीवेद्वर्षशतं साग्रमपमृत्यु विवर्जितः ।
नश्यन्ति व्याधयः सर्वे लूताविस्फोटकादयः ।।४३।।
स्थावरं जंगमं
चापि कृत्रिमं
चापि यद्विषम् ।
अभिचाराणि सर्वाणि मन्त्र यन्त्राणि भूतले ।।४४।।
भूचराः खेचराश्चैव जलजाश्चोपदेशिकाः ।
सहजाः कुलजा
माला डाकिनी शाकिनी
तथा ।।४५।।
த்ரைலோக்யே து ப4வேத்
பூஜ்ய: கவசேநாவ்ருத: புமான் |
இத3ம் து
தே3வ்யா: கவசம் தே3வாநாமபி து3ர்லப4ம் ||41||
ய: படே2த்
ப்ரயதோ நித்யம் த்ரிஸந்த்4யம் ஶ்ரத்3த4யாந்வித: |
தை3வீகலா
ப4வேத்தஸ்ய த்ரைலோக்யே சாபராஜித: ||42||
ஜீவேத்3கர்ஷஶதம்
ஸாக்3ரமபம்ருத்யு விவர்ஜித: |
நஶ்யந்தி வ்யாத4ய:
ஸர்வே லூதாவிஸ்போ2டகாத3ய: ||43||
ஸ்தா2வரம்
ஜங்க3மம் சாபி க்ருத்ரிமம் சாபி யத்3விஷம்
|
அபி4சாராணி
ஸர்வாணி மந்த்ரயந்த்ராணி பூ4தலே ||44||
பூ4சரா:
கே2சராஶ்சைவ ஜலஜாஶ்சோபதேஶிகா: |
ஸஹஜா: குலஜா மாலா டா3கிநீ
ஶாகிநீ ததா2 ||45||
ஶ்லோகம் : 41-45
கவசத்தினால்
காக்கப்பட்ட புருஷன் மூவுலகிலும் பூஜிக்கத் தக்கவனாவான்.
தேவியின் இக்கவசம்
தேவர்களாலும் அடைதற்கரிது.
தினந்தோறும்
முச்சந்தியிலும் நியமத்துடனும் சிரத்தையுடனும் எவன் இதைப் படிக்கிறானோ, அவனுக்கு
தைவீஸம்பத்து ஸித்திக்கும். மூவுலகிலும் அவன் பிறரால் ஜயிக்கப் படாதவனாவான்.
அவன் துர்மரண
பயமற்றவனாய்,
நூறாண்டும் அதற்கு மேலும் வாழ்வான். தோலிலும் இரத்தத்திலும்
தோன்றும் வியாதிகள் எல்லாம் நாசமடையும்.
இப்புவியில்
இயற்கையில்,
ஸ்தாவரங்களிலிருந்தும், ஜங்கமங்களிலிருந்தும்
உண்டாகிய விஷமாயினும், செயற்கை விஷமாயினும், மந்திர தந்திரங்களால் செய்யப்பட்ட அபிசாரங்களாயினும் எல்லாம்
(நாசமடையும்).
பூமியில்
சஞ்சரிப்பவர்களும்,
ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களும், நீரில்
தோன்றுபவர்களும், உடலுடன் தோன்றியவர்களும், குலதேவதைகளும், மாலாதேவதைகளும், அவ்வாறே டாகினீ, சாகினீ முதலிய தேவதைகளும்;
अन्तरिक्षचरा घोरा डाकिन्यश्च महाबलाः ।
ग्रहभूतपिशाचाश्च यक्षगन्धर्वराक्षसाः ।।४६।।
ब्रह्मराक्षसवेतालाः कूष्माणडा भैरवादयः ।
नश्यन्ति दर्शनात्तस्य कवचे हृदि संस्थिते ।।४७।।
मानोन्नतिर्भवेद्राझस्तेजीवृद्धिकरं परम् ।
यशसा वर्धते सोSपि कीर्तिमण्डितभूतले ।।४८।।
जपेत् सप्तशतीं चण्डीं कृत्वा तु कवचं पुरा ।
यावद्भूमण्डलं धत्ते सशैल वनकाननम् ।।४९।।
तावत्तिष्ठति मेदिन्यां संततिः पुत्रपौत्रकी ।
देहान्ते परमं स्थानं यत् सुरैरपि दुर्लभम् ।।५०।।
प्राप्नोति पुरुषो नित्यं महामाया प्रसादतः ।।
इति श्रीवाराहपुराणे हरिहरब्रह्मविरचितं देव्याः कवचं समाप्तम् ।।
அந்தரிக்ஷசரா கோ4ரா டா3கிந்யஶ்ச மஹாப3லா: |
க்3ரஹபூ4த பிஶாசஶ்ச யக்ஷக3ந்த4ர்வ
ராக்ஷஸா: ||46||
ப்3ரஹ்மராக்ஷஸ
வேதாலா: கூஷ்மாண்டா3 பை4ரவாத3ய: |
நஶ்யந்தி த3ர்ஶநாத்தஸ்ய
கவசம் ஹ்ருதி3 ஸம்ஸ்தி2தே ||47||
மாநோந்நதிர் ப4த்3ராக்ஞஸ்தேஜீவ்ருத்3தி4கரம்
பரம் |
யஶஸா வர்த4தே ஸோSபி கீர்திமண்டி3த பூ4தலே ||48||
ஜபேத் ஸப்தஶதீம்
சண்டீ3ம் க்ருத்வா து கவசம் புரா |
யாவத்3 பூ4மண்ட3லம் த4த்தே ஸஶைல வநகாநநம்
||49||
தாவத்திஷ்ட2தி
மேதி3ந்யாம் ஸந்ததி: புத்ரபௌத்ரகீ |
தே3ஹாந்தே
பரமம் ஸ்தா2நம் யத் ஸுரைரபி து3ர்லபம் ||50||
ப்ராப்நோதி புருஷோ
நித்யம் மஹாமாயா ப்ரஸாத3த: |
இதி ஸ்ரீவாராஹபுராணே
ஹரிஹரப்3ரஹ்மவிரசிதம் தே3வ்யா: கவசம் ஸமாப்தம்
ஶ்லோகம் : 46-50
கோர வடிவத்தில்
அந்தரிக்ஷத்தில் சஞ்சரிப்பவர்களும், பெரும் வலிமை பொருந்திய
டாகினிகளும், க்ரஹ பூத பிஶாசங்களும், யக்ஷ
கந்தர்வ அரக்கர்களும், ப்ரஹ்மராக்ஷஸர்களும் வேதாளங்களும்,
கூஷ்மாண்ட பைரவாதி துர்தேவதைகளும் கவசத்தை ஹ்ருதயத்தில் தரித்தவனைக்
கண்ட மாத்திரத்தில் ஒடுங்கிப் போகின்றனர்.
அரசனிடமிருந்து
வெகுமதியின் உயர்வும்,
சிறந்த திறமையின் ஏற்றமும் உண்டாகும். புவியெங்கும் கீர்த்தி பரவப்
பெற்று, அவன் புகழ் ஓங்கப் பெறுவான்.
(ஸாதகன்) முதலில் கவசத்தை
(ஜபம்) செய்து கொண்டு, பிறகு எழுநூறு மந்திரங்களைக் கொண்ட
சண்டி ஸ்தோத்ரத்தை ஜபிக்க வேண்டும். மலைகளும் வனங்களும் காடுகளும் கொண்ட
இப்பூமண்டலம் உள்ளவரை இவ்வுலகில் அவனுடைய புத்திர பௌத்திர ஸந்ததி நீடித்து நிலை
பெறும்.
உடல் வாழ்க்கையின்
முடிவில் தேவர்களும் அடைவதற்கரிய உயர்ந்த அழியாப் பதவியை அப்புருஷன் மஹாமாயையின்
ப்ரஸாதத்தால் எய்துவான்.
இங்ஙனம் ஸ்ரீவாராஹ
புராணத்தில் ப்ரஹ்மவிஷ்ணு மஹேஶ்வரர்களால் அருளப் பெற்ற தேவியின் கவசம் முற்றிற்று.