Sunday, 25 August 2013

திருக்குறள் - மூலமும் உரையும் (ஒரு இலக்கணப் பார்வையுடன்)

திருக்குறள் இயற்றி அரங்கேறிய நாளிலிருந்து இன்றுவரை அதற்குப் பலர், பல்வேறு காலகட்டங்களில் உரையெழுதியுள்ளனர். திருமூலர் மந்திரத்தில் “மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை” என்று ஒரு வரி வரும். இதற்குப் பொருள், ஒரு குழந்தையின் கண்ணுக்கு யானை பொம்மையாகத் தெரியும் பொருளானது, ஒரு தச்சரின் கண்ணுக்கு நல்ல தரமான மரமாகத் தெரியும். இதுகாறும் பலர் திருக்குறளை மூலமாகவும் அதற்கு உரையாகவும் தந்திருக்கின்றார்கள். தேவைப்படும்போது மட்டும் அதாவது கல்விகற்கும்போது மட்டும் ஒன்றிரண்டு அதிகாரங்களை அதன் பொருள், குறட்பாக்களில் இடம்பெற்றிருக்கும் இலக்கணக் குறிப்புகள் மற்றும் அணியிலக்கணம் இவற்றை மதிப்பெண் பெறும் நோக்கத்துடன் மட்டுமே பயின்றுவந்திருக்கின்றோம். மனிதம் எல்லாவகையிலும் புனிதமடையும் நோக்கோடு, ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய அறங்களை வலியுறுத்தும்விதமாக முதலில் அறத்துப்பாலையும், அவ்வாறு அறவழியில் நிற்பவர்கள், அவ்வழியினின்று வழுவாது பொருளீட்டும் வழிகளை வலியுறுத்தும் விதமாக பொருட்பாலையும், அறவழிநின்று பொருளீட்டிய மனிதன், அவ்வழி வழுவாது எவ்வாறு இன்பமாக வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தும் விதமாக இறுதியாக இன்பத்துப் பாலையும் கொண்டு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை வெறும் பொருளறியும் நோக்கோடு மற்றும் பாராது, தமிழிலக்கணம் மிக மிகச் செழிப்பாக இருந்த அவருடைய காலத்தில் அவரால் எழுதப்பட்ட திருக்குறள் எந்தளவுக்கு இலக்கண நெறிகளுக்குட் பட்டிருக்கின்றது என்பதை அறியும் ஒரு சிறுமுயற்சியாக இப்பணியைச் செய்துள்ளேன். முதல் குறட்பாவிலிருந்து கடைசி வரை அலகீட்டு வாய்ப்பாடு எழுதியபின்பு, அனைத்துக் குறட்பாக்களும் அலகிடுதலுக்குண்டான நெறிப்படி அமைந்துள்ளது கண்டு மிகவும் வியப்படைந்தேன். என்னாலியன்றவரை 1330 குறட்பாக்களிலுமுள்ள இலக்கணக் குறிப்பைத் தந்துள்ளேன். இதைப் படிக்கும் தமிழறிஞர்கள் என்னுடைய இந்தப் படைப்பை நன்கு ஆய்ந்து, அடியேன் செய்துள்ள தவறுகளைத் திருத்தி, விடுதல்களைச் சுட்டிக்காட்டி உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

4 comments:

  1. மிகுதியான் எனத் தொடங்கும் குறளின் அலகீட்டு வாய்ப்பாடு பற்றிக் கூறவும்.

    ReplyDelete
  2. மிகுதியான் எனத் தொடங்கும் குறளின் அலகீட்டு வாய்ப்பாடு பற்றிக் கூறவும்.

    ReplyDelete
    Replies
    1. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
      தகுதியான் வென்று விடல். 158

      மேற்கண்ட குறளுக்கான அலகீட்டு வாய்ப்பாடு:

      மிகு / தியான் மிக் / கவை செய் / தா / ரைத் தாந் / தம்
      நிரை / நிரை நேர் / நிரை நேர் / நேர் / நேர் நேர் / நேர்
      கருவிளம் கூவிளம் தேமாங்காய் தேமா
      (1) (2) (3) (4)

      தகு / தியான் வென் / று விடல்
      நிரை / நிரை நேர் / நேர் நிரைபு
      கருவிளம் தேமா மலர்
      (5) (6) (7)

      1 – 2: விளமுன் நேர் : இயற்சீர் வெண்டளை
      2 – 3: விளமுன் நேர் : இயற்சீர் வெண்டளை
      3 – 4: காய்முன் நேர் : வெண்சீர் வெண்டளை
      4 – 5: மாமுன் நிரை : இயற்சீர் வெண்டளை
      5 – 6: விளமுன் நேர் : இயற்சீர் வெண்டளை
      6 – 7: மாமுன் நிரை : இயற்சீர் வெண்டளை
      7-வது சீர் மலர் என்னும் வாய்ப்பாட்டைக் கொண்டு முடிந்தது.

      அலகீட்டு வாய்ப்பாட்டில் அசைச்சீர்கள் இரண்டு. அவையாவன, நேரசைச்சீர் மற்றும் நிரையசைச்சீர். திருக்குறளானது தமிழிலக்கணத்தில் வெண்பா வகையைச் சேர்ந்தது. எனவே, இதில் அதிகபட்சமாக, முச்சீர்களைக் கொண்டு மட்டுமே அமைந்துள்ளது.

      சீர்பிரிக்கும்போது, முதலெழுத்து குறில், இரண்டாமெழுத்து மெய்யெழுத்து அல்லது, முதலெழுத்து நெடில், இரண்டாமெழுத்து மெய்யெழுத்தாக வந்தால், அது “நேர்” என்றும்; முதலெழுத்து குறில், இரண்டாமெழுத்து நெடில் அல்லது மெய்யெழுத்து, அல்லது முதலெழுத்து குறில், இரண்டாமெழுத்து நெடில் மற்றும் மூன்றாமெழுத்து மெய்யெழுத்து, அல்லது முதலெழுத்து குறில், இரண்டாவது மற்றும் மூன்றாவது எழுத்துக்கள் மெய்யெழுத்தைக் கொண்டு அமைந்தால், அது “நிரை” என்றும் வழங்கப்படும்.
      ஆனால், முதலெழுத்து நெடில், இரண்டாமெழுத்து குறிலாக அல்லது நெடிலாக வந்தால், அதை “நிரை”யென்று அழைக்க தமிழிலக்கணத்தில் விதியில்லை.
      (உ-ம்) அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
      ஏதம் படுபாக்கு அறிந்து. 164
      மேற்கண்ட குறளில் “ஏதம்” என்பதை நிரைபு என்றழைத்து, “மலர்” என்று அலகிடக் கூடாது. மாறாக, ஏ / தம் = நேர் / நேர் = தேமா என்றுதான் சீர்பிரிக்க வேண்டும்.

      (உ-ம்) ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
      போகா றகலாக் கடை. 478

      மேற்கண்ட குறளில் “ஆகா” என்பதை “ஆகா என்று குறித்து, நிரைபு என்றழைத்து, “மலர்” என்று அலகிடக் கூடாது. மாறாக, ஆ / கா = நேர் / நேர் = தேமா என்றுதான் சீர்பிரிக்க வேண்டும்.
      திருக்குறளில் ஈற்றசைச் சீர் நால்வகைகளுள் ஏதாவது ஒன்றைக் கொண்டு முடியும். அவையாவன:

      ஒற்றைச் சீர்: நேர் என்னும் சீரில் முடிந்தால், அது “நாள்” என்னும் வாய்ப்பாட்டினைக் கொண்டு முடியும். அதாவது நாள் என்பதற்குச் சீர்பிரித்தால், அலகீட்டு வாய்ப்பாட்டிலக்கணப்படி நேர் என்று வரும்.

      (உ-ம்) உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
      இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160

      மேற்கண்ட குறளின் ஈற்றடிச்சீர் “பின்” என்று முடிந்துள்ளது. இதனைச் சீர்பிரித்தால், “நேர்” என்று குறிப்பிட வேண்டும்.

      நீங்கள் விளக்கம் கோரியுள்ள குறளின் ஈற்றசைச்சீர் “விடல்” இதனைச் சீர்பிரித்தால், “நிரை” என்று முடியும் அதாவது “மலர்” என்னும் வாய்ப்பாட்டினைக் கொண்டு முடியும். அதாவது மலர் என்பதற்குச் சீர்பிரித்தால், அலகீட்டு வாய்ப்பாட்டிலக்கணப்படி நிரை என்று வரும்.

      அடுத்தது, “காசு” இதனைச் சீர்பிரித்தால், கா / சு = நேர் / நேர் = தேமா என்ற விதிப்படி சொல் பிரிந்தால், அந்த ஈற்றசைச்சீர் “காசு” என்னும் வாய்ப்பாட்டினைக் கொண்டு முடியும்.

      (உ-ம்) வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
      பாத்திப் படுப்பதோ ராறு. 465

      மேற்கண்ட குறளில் ஈற்றசைச்சீர் “ராறு” என்று முடிந்துள்ளது. இச்சொல் காசு என்னும் வாய்ப்பாட்டைக் கொண்டு முடிந்துள்ளது.

      இறுதியாக, “பிறப்பு” இதனைச் சீர்பிரித்தால், பிறப் / பு = நிரை / நேர் = புளிமா என்ற விதிப்படி ஒரு ஈற்றசைச் சீர் பிரிந்தால், அந்த ஈற்றசைச்சீர் “பிறப்பு” என்னும் வாய்ப்பாட்டினைக் கொண்டு முடியும்.

      (உ-ம்) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு. 1

      மேற்கண்ட குறளில் ஈற்றசைச்சீர் “உலகு” என்று முடிந்துள்ளது. இச்சொல்லைச் சீர்பிரித்தால், “உல / கு = நிரை / நேர் = புளிமா” என்று பிரியும். அவ்வாறு பிரிந்தால் மேற்குறிப்பிட்ட “பிறப்பு” – க்கான விதிப்படி அந்த ஈற்றசைச்சீர் “பிறப்பு” என்னும் வாய்ப்பாட்டினைக் கொண்டு முடியும்.

      Delete
  3. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

    P.JAYARAMAN,
    #17/1, LAKSHMI NAGAR 1st STREET,
    KAVUNDAMPALAYAM,
    COIMBATORE 641 030
    MOBILE: 9843717733

    ReplyDelete