Wednesday, 16 January 2013

Chanakya Neethi - 1( A collection of Political & Social Principles)


முகவுரை

கௌடில்யர் என்றும், விஷ்ணுகுப்தர் என்றும் அறியப்பட்ட சாணக்யர் (கி.மு.350-275), தட்சசீலப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் ஆசாரியராகவும், பேரரசர் சந்த்ரகுப்த மௌரியரின் ப்ரதம மந்திரியாகவும் பணியாற்றி வந்தார். அவர், மிகவும் பழமையான, மிகவும் அறியப்பட்ட அரசியல் சிந்தனையாளர்கள், பொருளாதார நிபுணர்கள், மற்றும் அரசர்களை உருவாக்குபவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.

இந்தியத் துணை கண்டத்தில் இருந்த எண்ணற்ற பேரரசுகளின் ஒருங்கிணைப்பு மூலம் முதல் இந்தியப் பேரரசு அமைய, மற்றும் கிரேக்கப் பேரரசர் அலெக்ஸாண்டருக்கு எதிராகச் சண்டையிட உத்வேகம் அளிக்கும் சக்தியாகவும் அவர் இருந்தார்.

கன்பியூசியஸ் மற்றும் மாச்சிவெல்லி போன்ற நன்கு அறியப்பட்ட உலகின் மற்ற சமூக மற்றும் அரசியல் தத்துவஞானிகளுடன் ஒப்பிடும்போது, சாணக்யா இந்தியாவுக்கு வெளியே ஒருவேளை குறைவாக அறியப்பட்டவராக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இந்திய வரலாற்றில் முதல் உண்மையான அரசியல் கொள்கையாளராகக் கருதப்படுகிறார்.

அவரது தீர்க்கதரிசனம் மற்றும் அரசியலில் சூழ்நிலைக்கு ஏற்ற சமயோசிதம் இணைந்த தனது பரந்த அறிவு இந்தியாவில் வலிமைமிக்க மவுரிய பேரரசு அமைய உதவியது.

அரசியல் சிந்தனை மற்றும் சமூக ஒழுங்கிற்காக  அவர் தனது அரசியல் கருத்துக்களைத் தொகுத்து வழங்கியுள்ள 'அர்த்தசாஸ்திரம்' என்ற நூல், உலகின் பழமையான ஆய்வுக்கட்டுரைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டுகிறது. அவரது கருத்துக்கள் இந்தியாவில் இந்த நாளும் பிரபலமாக உள்ளன.

பண்டித ஜவஹர்லால் நேரு, “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்னும் தன்னுடைய நூலில், சாணக்யரை “இந்தியாவின் மாச்சிவெல்லி” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாணக்யரின் சூத்திரங்கள், கோட்பாடுகள் என்ற அடிப்படையில், மிகவும் தனித்துவம் கொண்டவை; ஒரு நிலையான அடிப்படையில் நல்ல முடிவு அடைவதற்கேற்ப, நடைமுறையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதாக நிரூபிக்கப்பட்டவை.

நமது வேலைப் பண்பாடு மற்றும் சமூக மேம்பாடு சிறப்பாக அமைய வேண்டுமெனில், இந்தக் கொள்கைகளை இன்றுகூட முயன்று பார்க்கலாம். அநேகமாக இவை வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், மற்றும் இந்தச் சமூகத்திற்கு சிறந்த பலனையளிக்கக்கூடும்.

முக்கியமான பின்குறிப்பு: பதினேழு அத்யாயங்கள் வாயிலாக தொகுத்துக் கொடுத்தவற்றைப் பற்றி முதல் அத்யாயத்தில், முதல் குறிப்பிலேயே சாணக்யர் இவ்வாறு தெளிவாகக் குறிப்பிடுகிறார்: ஸகல சக்திகளும் வாய்ந்த, மூவுலகங்களுக்கும் தலைவனான பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களைப் பணிந்து, பல்வேறு ஸாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு, ஒரு சிறந்த ராஜ்ய பரிபாலனத்திற்கான, நீதி ஸாஸ்திர சித்தாந்தங்களைக் கூறப்போகிறேன். அப்படியென்றால், பதினேழு அத்யாயங்கள் வாயிலாக தொகுத்துக் கொடுத்தவை அனைத்தும் அவருடைய சொந்தக் கருத்து அல்ல! அவருக்கும் முன்பாக வாழ்ந்த அறிஞர்கள் இயற்றியவற்றிலிருந்து அல்லது வேதங்களிலிருந்து அவை தொகுக்கப் பட்டிருக்கலாம். அடியேனும், அவர் தொகுத்ததாக எனக்குக் கிடைத்த ஹிந்தி நூல்களிலிருந்தும், திரு.விகாஸ் ஸூத் என்பவருடைய இணையதள வலைப்பதிவின் மூலமாகக் கிடைத்த ஆங்கில மொழியாக்கத்தைக் கொண்டு, என்னுடைய சிற்றறிவிற்கு எட்டியவரை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன். ஹிந்தி எழுத்துருவிலுள்ளதை எப்படி வாசிப்பது என்பதைக் காட்ட, உச்சரிப்பை அப்படியே ஆங்கிலத்திலும் தந்துள்ளேன். மொழி மாற்றம் மற்றும் மொழியாக்கத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை எனது vyshupjr@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவிக்குமாறு வாசக அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்நூலிலுள்ள பல விஷயங்களைப் படிக்கும்போது சில வாசகர்கள் மனதில் எதிர்ப்புணர்வு தோன்றலாம், அவை இந்தக் காலத்திற்குப் பொருந்தாததாகவும் தோன்றலாம். அதற்கு சாணக்யரோ அல்லது அடியேனோ பொறுப்பு அல்ல. ஏற்கெனவே மேற்குறிப்பிட்டவாறு, நமது வேலைப் பண்பாடு மற்றும் சமூக மேம்பாடு சிறப்பாக அமைய வேண்டுமெனில், இந்தக் கொள்கைகளை இன்றுகூட முயன்று பார்க்கலாம். அநேகமாக இவை வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், மற்றும் இந்தச் சமூகத்திற்கு சிறந்த பலனையளிக்கக்கூடும். அவ்வளவே!


அன்புடன்,

பி.ஜெயராமன்                              P.JAYARAMAN,
№.17/1, லட்சுமிநகர் முதல் வீதி,             №.17/1, Lakshmi Nagar 1st Street,
கவுண்டம்பாளையம்,                        Kavundampalayam,
கோயமுத்தூர் – 641 030.                    COIMBATORE – 641 030.


चाणक्य नीति [ हिंदी में ]: प्रथम अध्याय | Chanakya Neeti [In Hindi]: First Chapter
Cāṇakya nīti [hindī mēṁ]: Prathama adhyāya
சாணக்யா கொள்கை: முதல் பாடம்

. सर्वशक्तिमान भगवान विष्णु  को नमन करते हुए जो तीनो लोको के स्वामी  है, मै एक राज्य के लिए  नीति  शास्त्र  के सिद्धांतों  को कहता हूँ. अनेक शास्त्रों  का आधार ले कर मै यह सूत्र  कह रहा हूँ.

Sarvśaktimān bhagvān vishnu kō naman kartē hu'ē jō tīnō lōkō kē svāmī hai, mai ēk rājya kē li'ē nīti śāstra kē sid'dhāntōm kō kahtā hūm. Anēk śāstrōm kā ādhār lē kar mai yah sūtr kah rahā hūm.

1. Humbly bowing down before the almighty Lord Sri Vishnu, the Lord of the three worlds, I recite maxims of the science of political ethics (niti) selected from the various satras (scriptures).

1. ஸகல சக்திகளும் வாய்ந்த, மூவுலகங்களுக்கும் தலைவனான பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களைப் பணிந்து, பல்வேறு ஸாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு, ஒரு சிறந்த ராஜ்ய பரிபாலனத்திற்கான, நீதி ஸாஸ்திர சித்தாந்தங்களைக் கூறப்போகிறேன்.

2. जो व्यक्ति शास्त्रों के सूत्रों  का अभ्यास करके ज्ञान ग्रहण करेगा उसे अतयंत वैभवशाली कर्त्तव्य के सिद्धांत जात होगे. उसे पता चलेगा की किस  बात को करना चाहिए और तिक्से नहीं करना चाहिए. उसे पता चलेगा की भला कया है और बुरा कया है. उसे सर्वोत्तम का भी ज्ञान होगा.

2. Jō vyakti śāstrōm kē sūtrōm kā abhyās karkē jñān graha karēgā usē atyant vaibhavśālī karttavy kē sid'dhānt jāt hōgē. Usē patā calēgā kī kis bāt kō karnā cāhi'ē aur tiksē nahīm karnā cāiha'ē. Usē patā calēgā kī bhalā kyā hai aur burā kyā hai. Usē sarvōttam kā bhī jñān hōgā.

2. That man who by the study of these maxims from the satras acquires a knowledge of the most celebrated principles of duty, and understands what ought and what ought not to be followed, and what is good and what is bad, is most excellent.

2. ஸாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள நீதிமொழிகளைக் கற்பதன் மூலம் ஞானம் அடைகின்றவன், தான் நிறைவேற்றவேண்டிய மிகச் சிறந்த கடமைகளைப் பற்றித் தெளிவாக இருக்கிறான். மேலும், அவன் செய்ய வேண்டியவை, அல்லாதவை பற்றியும் தெளிவாக இருக்கிறான். அவன் செல்லும் பாதையிலுள்ள நல்லவை மற்றும் தீயவை எவை என்பதைப் பற்றியும் தெளிவாக அறிந்திருக்கிறான். அப்படிப்பட்டவனே சிறந்த ஞானி.

3. इसलिए लोगो का भला करने के लिए उस बात को कहता हूँ की जिससे लोग सभी बातो को सही परिपेक्ष्य मे देखेगे.
3. Isli'ē lōgō kā bhalā karnē kē li'ē us bāt kō kahtā hūm̐ kī jisasē lōga sabhī bātō kō sahī paripēkya mē dēkhēgē.

3. Therefore with an eye to the public good, I shall speak that which, when understood, will lead to an understanding of things in their proper perspective.

3. எனவே மக்களைச் சிறந்தவர்களாக்க, நான் அவர்களிடம் சொல்வது என்னவென்றால், நீங்கள் எந்த விஷயத்தையும் சரியான முறையில் பார்க்க வேண்டும்.

. एक विद्वान  भी दुखी  हो जाता है यिद वह किसी मुर्ख  को उपदेश देता है, यदि वह एक दुष्ट पत्नी का पालन करता है या किसी दुखी व्यक्ति के साथ अतयंत घनिष्ठ सम्बन्ध बना लेता है.

4. Ēk vidvān bhī dukhī hō jātā hai yid vah kisī murkh kō upadēś dētā hai, yadi vah ēk duṣṭ patnī kā pālan kartā hai yā kisī dukhī vyakti kē sāth atyant ghaniṣṭh sambandh banā lētā hai.

4. Even a scholar will be a grieved if he - teaches to a foolish disciple; - does follow a wicked wife, and, - delightful, intimate relationship with any miserable person.

4. ஒருவர் மிகப்பெரிய அறிஞராக இருந்தாலும் அவர், ஒரு முட்டாளுக்குக் கற்பிக்கும்போதும், ஒரு மோசமான மனைவிக்குக் கட்டுப்பட்டிருந்தாலும், மகிழ்ச்சியற்ற நபருடன் மிக நெருக்கமான/அதிகப்படியான உறவைக் கொண்டிருந்தாலும் மிகுந்த பாதிப்பை/துன்பத்தையடைகிறார்.

. दुष्ट पती, झूठा मित्र , बदमाश नौकर और सर्प  के साथ निवास साक्षात् मृत्यु के समान है.

5. Duṣṭ patī, Jhūhā mitra, badmāś naukar aur sarp kē sāth Nivās Sākāt Mr̥tyu kē samān hai.

5. Living in a house with a wicked husband, a false friend, a saucy servant and a serpent are nothing but death.

5. துன்மார்க்கக் கணவன், பொய்யான நண்பர்கள், திருட்டு புத்தியுள்ள வேலைக்காரன் மற்றும் பாம்புடன் ஒரு வீட்டில் வசிப்பது என்பது எப்போதும் மரணத்துடன் வாழ்வதற்குச் சமம்.

. व्यक्ति को  आने वाली मुसीबतो से निपटकर धन संचय करना चाहिए. उसे धन को त्यागकर पत्नी की सुरक्षा करनी चाहिए. लेकिन यिद आत्मा की सुरक्षा की बात आती है तो उसे धन और पती दोनो को गौण समझना चाहिए.

6. Vyakti kō ānē vālī musībtō sē nipatakara dhana san̄caya karanā cāhi'ē. Usē dhana kō tyāgakara patnī kī surakā karanī cāhi'ē. Lēkin yida ātmā kī surakā kī bāta ātī hai tō usē dhana aura patī dōnō kō gaua samajhanā cāhi'ē.

6. One should save his money against hard times, save his wife at the sacrifice of his riches, but invariably one should save his soul even at the sacrifice of his wife and riches.

6. ஒருவர், தனது கஷ்ட காலத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளத் தேவையான செல்வத்தைச் சேமித்துக் கொள்ள வேண்டும். தனது மனைவியக் காப்பாற்ற வேண்டுமெனில், தான் சேர்த்து வைத்த செல்வத்தைத் தியாகம் செய்ய வேண்டும். அதே நபர், தனது ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில், தனது மனைவியையும், சேர்த்துவைத்த செல்வத்தையும் கூட இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

. आगे आने वाली मुसीबतो के लिए धन संचय करे. ऐसा ना कहे की धनवान व्यक्ति को मुसीबत कैसी? जब धन साथ छोड़ता है तो संगठित धन तेजी से घटता है.

7. Āgē ānē vālī musībtō kē ̔ila'ē dhan san̄cay karē. Aisā nā kahē kī dhanvān vyakti kō musībta kaisī? Jab dhan sāth chōtā hai tō sagahit dhan tējī sē ghatā hai.

7. Save your wealth against future calamity. Do not say, "What fear has a rich man, of calamity?" When riches begin to forsake one even the accumulated stock dwindles away.

7. பின்னால் நிகழக்கூடிய இயற்கை உற்பாதங்களை எதிர்நோக்கி ஒருவன், (தான் செல்வந்தனாக இருந்தால் கூட) அதற்கேற்ப செல்வத்தைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு செல்வந்தன் “எதற்காக இயற்கை உற்பாதங்களைக் கண்டு பயப்பட வேண்டும்?” என்று வினவக் கூடாது; சேமிக்காமல் இருக்கக் கூடாது. ஏனென்றால், அவ்வாறு சேமிக்கத் தவறும் பட்சத்தில், இயற்கை உற்பாத நேரத்தில் தான் ஏற்கெனவே சேமித்து வைத்ததைக் கூட இழக்க நேரிடலாம்.

.  उस देश मे निवास करे जहा आपकी कोई इजजत नहीं, जहा आप रोजगार नहीं कमा सकते, जहा आपके कोई मित्र नहीं और जहा आप कोई ज्ञान आर्जित नहीं कर सकते .

8. Us dēś mē Nivās na karē jahā āpkī kō'ī ijajat nahī, jahā āp rōjgār nahī kamā saktē, jahā āpkē kō'ī mitr nahī aur jahā āp kō'ī jñān ārjit nahī kar sakatē.

8. Do not inhabit a country where you are not respected, cannot earn your livelihood, have no friends, or cannot acquire knowledge.

8. ஒருவனுக்கு எந்த தேசத்தில் மரியாதையில்லையோ, வாழ்வாதாரத்திற்கான வேலை கிடைக்கவில்லையோ, நண்பர்களில்லையோ, அல்லது தான் விரும்பும் அறிவைப் பெற முடியாதோ, அங்கு சென்று அவன் வசிக்கக் கூடாது.

. वहा एक दिन भी ना रके जहा ये पाच ना हो. धनवान व्यक्ति , विदान  व्यक्ति जो शास्त्रों को जानता हो, राजा, नदियाँ, और चिकित्सक .

9. Vahā ēk din bhī nā rakē jahā yē pāc nā hō. Dhanvān vyakti, vidān vyakti jō śāstrōm kō jāntā hō, Rājā, Nadiyām, Aur cikitsak.

9. Do not stay for a single day where there are not these five persons: a wealthy man, a brahmin well versed in Vedic lore, a king, a river and a physician.

9. இந்த ஐந்து நபர்களில்லாத இடத்தில் ஒருநாள் கூட வசிக்கக் கூடாது:
1. செல்வந்தன்; 2. வேதங்களை நன்கு கற்றறிந்த அந்தணன்; 3. அரசன்; 4. ஆறு மற்றும் 5. வைத்தியன்

१० .  बुद्धिमान व्यक्ति ऐसे देश कभी ना जाए जहा ... रोजगार कमाने का कोई माधयम ना हो. जहा लोग किसी से डरते न हो. जहा लोगो को किसी बात की लज्जा न हो. जहा लोगो के पास बुद्धिमत्ता न हो. जहा के लोगो की वृत्ति दान धरम करने की ना हो.

10. Bud'dhimān vyakti aisē dēś kabhī nā jā'ē jahā... Rōjgār kamānē kā kō'ī mādhyam nā hō. Jahā lōg kisī sē aratē na hō. Jahā lōgō kō kisī bāt kī lajjā na hō. Jahā lōgō kē pās bud'dhimattā na hō. Jahā kē lōgō kī vr̥tti dān dharm karnē kī nā hō.

10. Wise men should never go into a country where there are no means of earning one's livelihood, where the people have no dread of anybody, have no sense of shame, no intelligence, or a charitable disposition.

10. ஒரு புத்திசாலியான மனிதன், எந்த நாட்டில் தனது வாழ்வாதாரத்திற்கான வேலை கிட்டாதோ, எந்த நாட்டிலுள்ள மக்கள் எதைச் செய்யவும் பயப்படவில்லையோ, எந்த நாட்டிலுள்ள மக்கள் எதற்கும் வெட்கப்படவில்லையோ, எந்த நாட்டில் அறிவுள்ள மக்களில்லையோ, எந்த நாட்டிலுள்ள மக்களிடம் நியாய தர்ம உணர்வில்லையோ, அந்த நாட்டிற்குள் நுழையக்கூடாது.

११ . नौकर की परीक्षा जब वह कर्त्तव्य का पालन  न कर रहा हो तब करे. रिश्तेदार की परीक्षा जब आप मुसीबत मे हो तब करे. मित्र की  परीक्षा विपरीत काल मे करे. जब आपका वक्त अचछा चल रहा हो तब पत्नी की परीक्षा करे.

11. Naukar kī parīkā jab vah karttavy kā pālan na kar rahā hō tab karē. Riśtēdār kī parīkā jab āp musībata mē hō taba karē. Mitra kī parīkā viparīt kāl mē karē. Jab āpkā vakt acchā na cal rahā hō tab patnī kī parīkā karē.

11. Test a servant while in the discharge of his duty, a relative in difficulty, a friend in adversity, and a wife in misfortune.

11. நீ உன்னுடைய வேலைக்காரனைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், அவன் உனக்குக் கீழ்ப்படியாதிருக்கும் போது தெரிந்துகொள்ளலாம்.
நீ உன்னுடைய உறவினர்களைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், நீ கஷ்டப்படும்போது தெரிந்து கொள்ளலாம். நீ உன்னுடைய நண்பர்களைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், உன்னுடைய சோதனைக் காலத்தில் தெரிந்து கொள்ளலாம். நீ உன்னுடைய மனைவியைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், உன்னுடைய நேரம் சரியாக இல்லாதபோது தெரிந்து கொள்ளலாம்.

१२ . अच्छा मित्र हमे तब नहीं छोड़ेगा जब हमे उसकी जररत हो, कोई दुघरटना हो गयी हो, अकाल पड़ा हो, युद्ध चल रहा हो, जब हमे राजा के दरबार मे जाना पड़े, जब हमे समशान घाट जाना पड़े.

12. Acchā mitra hamē tab nahī chōēgā jab hamē uskī jarart hō, kō'ī dugharnā hō gayī hō, akāl paā hō, yud'dh cal rahā hō, jab hamē rājā kē darbār mē jānā paē, jab hamē samaśān ghā jānā paē.

12. He is a true friend who does not forsake us in time of need, misfortune, famine, or war, in a king's court, or at the crematorium (smasana).

12. ஒரு உண்மையான நண்பன் என்பவன், - எப்பொழுது நமக்கு அவன் உதவி தேவைப் படுகிறதோ, அப்பொழுது தவறாமல் உதவுபவன்; - எப்பொழுது நாம் துரதிருஷ்ட நிலையை அடைகிறோமோ, அப்பொழுது காப்பாற்றுபவன்; - எப்பொழுது நாம் வறுமை நிலையை அடைகிறோமோ, அப்பொழுது உதவுபவன்; - எப்பொழுது யுத்தமுனையில் இருக்கிறோமோ, அப்பொழுது துணை நிற்பவன்; - எப்பொழுது அரசநீதி அவையின் முன்னிறுத்தப்பட்டிருக்கையில் நம் பக்க நியாயத்தை நிலைநிறுத்துபவன், அல்லது - நமது இறுதிப்பயணத்தை மேற்கொள்ளும்போது சுடுகாடு வரை வருபவன்.

१३ . जो व्यक्ति  कसी नाशवंत चीज के लिए जिसका कभी नाश नहीं होने वाला ऐसी चीज को छोड़ देता है, तो उसके हाथ से अिवनाशी तो चला ही जाता है और इसमे कोई संदेह नहीं की नाशवान को भी वह खो देता है.

13. Jō vyakti kasī nāśvant cīj kē li'ē jiskā kabhī nāś nahīṁ hōnē vālā aisī cīja kō chōṛa dētā hai, Tō usakē hātha sē yē vināśī tō calā hī jātā hai aura isamē kō'ī sandēha nahīṁ kī nāśavāna kō bhī vaha khō dētā hai.

13. He who gives up what is imperishable for that which is perishable, loses that which is imperishable; and doubtlessly loses that which is perishable also.

13. அழியக்கூடிய ஒன்றிற்காக அழிவற்றதை இழக்கத் தயாராக இருப்பவன், சந்தேகமின்றி இழப்பது அழிவற்றதை மட்டுமல்ல, அந்த அழியக்கூடியதையும் சேர்த்துதான்!

१४ . एक बुद्धिमान व्यक्ति को चाहिए की वह एक इजजतदार घर की अविवाहित कनया सेविवाह करे. यिद ऐसी कनया मे कोई वयंग है तो भी. किसी हीन घर की लड़की से वह सुनदर हो तो भी विवाह नहीं करना चाहिए. शादी बराबरी के घरो मे हो यह उचित है.

14. Ēk bud'dhimān vyakti kō cāhi'ē  kī vah ēk ijajatdār ghar kī avivāhit kanyā sēvivāh karē. Yid aisī kanyā mē kō'ī vyag hai tō bhī. Kisī hīn ghar kī lakī sē vah sundar hō tō bhī vivāh nahī karnā cāhi'ē. Śādī barābarī kē gharō mē hō yah ucit hai.

14. A wise man should marry a virgin of a respectable family even if she is deformed. He should not marry one of a low-class family, though beauty. Marriage in a family of equal status is preferable.

14. ஒரு புத்திசாலி மனிதன், திருமணம் செய்துகொள்வதென்றால், மதிப்புமிக்க ஒரு குடும்பத்தின் பெண்ணை (அவள் குறைபாடுள்ளவள்/அழகற்றவள் எனினும்) மட்டுமே மணந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் அவன் மதிப்பு குறைந்த குடும்பத்தின் பெண்ணை (அவள் மிகவும் அழகானவளாக இருந்தாலும் கூட) மணக்கக் கூடாது. அந்தஸ்து சமமாக உள்ள குடும்பங்களுக்குள் திருமணம் நடப்பது என்பது சாலச் சிறந்தது.

१५ . आप कभी इन ५ पर विश्वास ना करे. १. निदया ; २. जिसके हाथ मे शास्त्र हो ; ३. पशु जिसे नाख़ून या सिंग हो ; ४. औरत (यहाँ संकेत भोली सूरत की तरफ है, बहने बुरा न माने ) ; ५. राज घरानो के लोगो पर.

15. Āp kabhī in 5 par viśvās nā karē. 1. Nidyā; 2. jiskē hāth mē śāstr hō; 3. Paśu jisē nāḵẖūn yā sig hō; 4. Aurat (yahām̐ sakēt bhōlī sūrat kī taraph hai, bahnē burā na mānē); 5. Rāj gharānō kē lōgō par.

15. Do not put your trust in rivers, men who carry weapons, beasts with claws or horns, women, and members of a royal family.

15. இந்த ஐந்தினை நம்பக்கூடாது: - 1. நதிகள், 2. ஆயுதம் தாங்கிய நபர்கள், 3. கூரிய பற்கள் மற்றும் கொம்புகளை உடைய மிருகங்கள், 4. பார்க்க அப்பாவி போல் தோன்றும் பெண்கள் (மனதை அள்ளும் பெண்கள் விதிவிலக்கு); 5. அரச குடும்பத்தின் உறுப்பினர்கள்.

१६ . विष मे से भी हो सके तो अमृत निकाल ले. यिद सोना गनदगी मे गिरा हो तो उसे उठाये और धोये और अपनाये. यिद कोई निचले कुल मे जनमने वाला भी आपको सर्वोत्तम ज्ञान देता है तो उसे अपनाये. उसी तरह यिद कोई बदनाम घर की लड़की जो महान गुणो से संपनन है यिद आपको सीख देती है तो गहण करे.

15.Viṣ mē sē bhī hō sakē tō amr̥ta nikāl lē. Yid sōnā gandagī mē girā hō tō usē uṭhāyē aur dhōyē aur apnāyē. Yid kō'ī niclē kul mē janamnē vālā bhī āpkō sarvōttam jñān dētā hai tō usē apnāyē. Usī tarah yid kō'ī badnām ghar kī laṛkī jō mahān guṇō sē sampanana hai yid āpkō Sīkh dētī hai tō gahaṇ karē.

16. Even from poison extract nectar, wash and take back gold if it has fallen in filth, receive the highest knowledge (Krsna consciousness) from a low born person; so also a girl possessing virtuous qualities (stri-ratna) even if she were born in a disreputable family.

16. விஷத்திலிருந்து கூட தேனை எடுக்கலாம். தங்கமானது, அசுத்தத்தில் விழுந்துவிட்டால், அதனைக் கழுவி எடுத்துக்கொள்ளலாம். ஒருவன் பிறப்பால் தாழ்ந்த குலத்தவனாயினும், அவனிடமுள்ள சிறந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதைப் போலவே, மிக நல்ல குணங்களைக் கொண்ட பெண் ஒரு மதிப்பற்ற குடும்பத்தைச் சேர்ந்தவளாயிருப்பினும், அவளை ஏற்றுக் கொள்ளலாம்.

१७ .  औरतो मे मर्दों के मुकाबले, भूख दो गुना, लजजा चार गुना, सहस छः गुण, कामना आठ गुना  होती है.

17. Auratō mē mardōṁ kē mukāblē. Bhūkh dō gunā Lajjā cār gunā Sahas chaḥ guṇ Kāmnā āṭh gunā hōtī hai.

17. Women have hunger two-fold, shyness four-fold, daring six-fold, and lust eight-fold as compared to men.

17. ஆண்களோடு பெண்களை ஒப்பிடுகையில், பெண்களுக்கு
- பசியுணர்வு இரு மடங்கு,
- வெட்கம் நான்கு மடங்கு,
- துணிவு ஆறு மடங்கு, மற்றும்
- சிற்றின்ப இச்சை எட்டு மடங்கு அதிகம்!